உலகம்

கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் உருண்டோடி விபத்து.. ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) கார் விபத்தில் உயிரிழந்தார்.

கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் உருண்டோடி விபத்து.. ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான்   ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் என ரசிகர்களால் கொண்டாடப்படும், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ் டவுன்வில்லே பகுதியில் காரி தனியாக சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து உருண்டு விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1,462 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அவர் அணிக்காக 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார்.

1999 - 2007ம் ஆண்டுகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் உலகை ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியபோது அந்த அணியின் முக்கிய தூணாக சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வந்தார் அவர். ஆல்ரவுண்டரான அவர், பேட்டிங் செய்வதுடன் நடுத்தர வேகம் மற்றும் சுழற்பந்து என தேவைக்கேற்றபடி பந்து வீசவும் செய்வார். சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார்.

நடப்பு ஆண்டில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், சைமண்ட்சும் விபத்தில் உயிரிழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories