அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ் வெல்ச். இவர் தனது காதலியிடம் நீ எங்கு சென்றாலும் அதைத் எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு முதலில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து life360 என்ற செயலி மூலம் இருவரும் தங்களின் இருப்பிடத்தைப் பகிர்ந்து வந்துள்ளனர். பின்னர் லாரன்ஸ் தொடர்ந்து சண்டை போட்டு வந்ததால் காதலை முறித்துக் கொள்ள அந்தப் பெண் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து life360 செயலியில் தனது இருப்பிடத்தையும் பிகிர மறுத்துள்ளார். ஆனால் அவருக்கு லாரன்ஸ் தொல்லை கொடுத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன அந்தப் பெண் இதுகுறித்து போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பிறகு போலிஸார் லாரன்ஸை தொடர்புகொண்டு விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த லாரன்ஸ் தனது காதலியின் கார் டயரில் இருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துள்ளார். இதைப்பார்த்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, லாரன்ஸ் காரில் இருந்து எடுத்தது ஆப்பிள் வாட்ச் என்பது தெரிந்தது. மேலும் அதைக் காதலியின் காரில் வைத்து அவர் எங்குச் செல்கிறார் என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர்.