விளையாட்டு

#IPL2022 - லக்னோவை சிதைத்த முகமது ஷமி: கே.எல்.ராகுலின் எடுபடாத வியூகம்!

லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் குஜராத் அணி தோல்வியடைந்தது.

#IPL2022 -  லக்னோவை சிதைத்த முகமது ஷமி: கே.எல்.ராகுலின் எடுபடாத வியூகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஐ.பி.எல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஆட்டத்தில் குஜராத்திற்கு வெற்றியை தேடிக்கொடுத்த ஷமியின் ஸ்பெல்லை பற்றியும் கேப்டன் கே.எல்.ராகுலின் எடுபடாத வியூகம் பற்றியும் ஒரு சிறு அலசல் இங்கே.

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியே முதலில் பேட் செய்திருந்தது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பவர்ப்ளே 6 ஓவர்களில் வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். லக்னோவின் இந்த வீழ்ச்சியை நிகழ்த்திக் காட்டியவர் முகமது ஷமி.

முகமது ஷமி தனது 4 ஓவர்களில் 3 ஓவர்களை பவர்ப்ளேயில் வீசியிருந்தார். இந்த 3 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மூன்றுமே மிக முக்கியமான விக்கெட்டுகள். குறிப்பாக, இன்னிங்ஸின் முதல் பந்திலேயே கே.எல்.ராகுலின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஷமியின் சீம் மூவ்மெண்ட்டில் பேட்ஸ்மேன்கள் திணறிப்போயினர். கே.எல்.ராகுலை குற்றம் சொல்லி ஒன்றுமில்லை. ஷமி ஆடவே முடியாத ஆட வாய்ப்பே இல்லாத டெலிவரிக்களை வீசிக்கொண்டிருக்கிறார் என கவாஸ்கரே கமெண்ட்ரி பாக்ஸில் பாராட்டிக் கொண்டிருந்தார். ஷமி இரண்டு ஸ்லிப்களை வைத்து கூட அட்டாக் செய்யலாம் என தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் கூறியிருந்தார். அந்தளவுக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் லைன் & லெந்த்தை பிடித்து அட்டகாசமாக வீசினார். கே.எல்.ராகுலை முதல் பந்தில் வீழ்த்தியவர். குவிண்டன் டீகாக்கை அடுத்த ஓவரிலேயே வீழ்த்தினார். ர

வுண்ட் தி விக்கெட்டில் வந்து சில பந்துகளை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசியவர் ஒரு பந்தை மட்டும் நன்றாக இன்ஸ்விங் செய்திருப்பார். அதை எதிர்கொள்ள முடியாமல் லெக் ஸ்டம்பை பறிகொடுத்து டீகாக் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே மணீஷ் பாண்டேவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். கே.எல்.ராகுலுக்கு போட்ட அதே லெந்தில் பந்தை வெளியே எடுக்காமல் உள்பக்கமாக திருப்பியிருந்தார். அதை எதிர்கொள்ள முடியாமல் மணீஷ் பாண்டே ஸ்டம்பை பறிகொடுத்தார். அந்த 3 ஓவர்களிலேயே லக்னோவின் டாப் ஆர்டர் மொத்தத்தையும் ஷமி காலியாக்கிவிட்டார். குஜராத்தின் வெற்றிக்கு ஷமியின் இந்த ஸ்பெல் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஷமிக்கே ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது.

#IPL2022 -  லக்னோவை சிதைத்த முகமது ஷமி: கே.எல்.ராகுலின் எடுபடாத வியூகம்!

ஷமியின் ஸ்பெல் மட்டுமில்லை, லக்னோ அணியின் கேப்டனான ராகுல் செய்த ஒரு தவறும் குஜராத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. குஜராத் அணியும் சீராக விக்கெட்டுகளை இழந்து கொஞ்சம் தடுமாறிக்கொண்டே இருந்தது. 15 வது ஓவர் வரைக்குமே ஆட்டம் லக்னோ பக்கமாகத்தான் இருந்தது. ஆனால், இதன்பிறகு கே.எல்.ராகுல் எடுத்த அந்த ஒரு முடிவு பிரச்சனையானது. 7-15 இந்த மிடில் ஓவர்களில் 8 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்தே ராகுல் கடத்தியிருந்தார். இந்த 8 ஓவர்களிலேயே 39 ரன்கள்தான் வந்திருந்தது.

ஆனால், இதன்பிறகு வீசப்பட்ட 16-17 அந்த 2 ஓவர்களில் மட்டும் இன்னொரு 39 ரன்கள் வந்திருந்தது. ஸ்பின்னர்களை சரியான நேரத்தில் கட் செய்யாமல் பார்ட் டைமரான தீபக் ஹூடாவிற்கும் ரவி பிஷ்னோயிற்கும் தலா ஒரு ஓவரை கூடுதலாக கொடுத்தார். இந்த 2 ஓவர்களிலும் திவேதியா மற்றும் மில்லர் இருவருமே வெளுத்து வாங்கினர். 39 ரன்கள் வந்திருந்தது. இந்த 2 ஓவர்களும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. குஜாராத்தும் வென்றுவிட்டது. நிறைய ஓவர்களை கையில் வைத்திருந்த வேகப்பந்து வீச்சாளர்களை சரியான நேரத்தில் பயன்படுத்தியிருந்தால் ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். கே.எல்.ராகுல் தவறவிட்டுவிட்டார்!

banner

Related Stories

Related Stories