தமிழ்நாடு

’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை  அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று 'அரிசன் காலனி' என்ற பெயரில் இருந்தது. இதை மாற்றும் செய்ய வேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என எழுதி இருந்ததை கருப்பு மையை கொண்டு தனது கையாலேயே அழித்தார்.

பின்னர், ”ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு" என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். மேலும், இதற்காக போராடிய ஊர் பெரியவர் கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்.

இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் அன்பழகன் அவர்களிடம் ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை தெரிவித்தார்.

திடீரென்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு அமைச்சர் வருகை தந்ததால் ஊர்மக்களும், ஆசிரியர்களும் ஒன்று கூடினார்கள். தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற நேரடியாக வந்ததை அறிந்து அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என கலைஞரின் வரிகளைக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories