இந்தியா

”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. தற்போது காவல்துறையை கொண்டே துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்டு தர்பார் ஆட்சியாக பா.ஜ.க ஆட்சி உருவெடுத்து நிற்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் இந்து கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விஷ்ணு சங்கர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்ததார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மசூதியை ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து நவ. 5 ஆம் தேதி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் இன்று மீண்டும் ஆய்வு செய்வதற்கு இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலிஸாருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.

பிறகு போலிஸார் அவர்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. பா.ஜ.க அரசே பதற்ற நிலையை மேலும் அதிகரித்துள்ளது. அதிகார அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படுகின்றன. இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories