உலக நாடுகள் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். உலகின் ஒஅல நாடுகளின் இன்னும் மரண தண்டனை தொடர்வதற்கு ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் ஒரேநாளில் 81 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சவுதி அரசு சார்பில் வெளியான தகவலில், இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் அணைவரும் கொடூரமான குற்றங்களை செய்தவர்.
மேலும் இந்த மரண தண்டனை பெற்றவர்களில் பல பயங்கிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா, யேமனின் ஹீதி கிளர்ச்சிப் படைகள் தொடர்புடையவர்களும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களுக்கும் உள்ளன.
இவர்கள் பொருளாதார மையம் மற்றும் சவுதி பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள். மேலும் இதில் 81 பேரில் 73 பேர் சவுதி நாட்டை சேர்ந்தவர்கள், 7 பேர் ஏமன் சேர்ந்தவர்கள் ஒருவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவகள் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 69 பேருக்கு மட்டுமே மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ஒரேநாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.