ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சி முதல்வர் நவீன் பட்நாயக் அவரின் கட்சி எம்.எல்.ஏ ஒருவரை அண்மையில் சஸ்பெண்ட் செய்திருந்தார். பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ பிரசாந்த் ஜக்தேவ் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் தலித் தலைவர் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ பிரசாந்த் ஜக்தேவிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்துவருகிறது. அந்தவகையில், ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் உள்ள பானாபூர் பகுதி அருகே அவருக்கு எதிராக கூடியிருந்த மக்கள் மீது பிரசாந்த் ஜக்தேவின் வாகன மோதியது. இந்த விபத்தில் 10 காவலர்கள் மற்றும் இரண்டு பத்திரிக்கையாளர்கள் உட்பட குறைந்தது 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பானாபூர் பிடிஓ அலுவலகத்திற்கு வெளியே தேர்தல் தொடர்பான நடவடிக்கை நடந்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்படுள்ளதாக தெரியவந்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்து சிலர் பிரசாந்த் ஜக்தேவை கடுமையாக தாக்கினார்கள்.
இதில் பிரசாந்த் ஜக்தேவ் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புனேஷ்வரில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் பிரசாந்த் ஜக்தேவ் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.