அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் உள்ளவெள்ளை மாளிகையில் திங்களன்று அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர், செய்தியாளர் சந்திப்பு முடிவடையும் நேரத்தில் பீட்டர் டூசி என்ற செய்தியாளர் பணவீக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது மைக் ஆன் செய்யப்பட்டிருப்பதை மறந்து அவரை அதிபர் ஜோ பைடன் அவரை ஒருமையில் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கேள்விக்கு, " என்ன ஒரு முட்டாள்தனமான ஆள்" எனக் கூறி அவரை ஒருமையில் திட்டினார். மைக் ஆன் செய்திருந்ததால் இவரின் அந்த பேச்சு அங்கிருந்த அனைவருக்கும் கேட்டது. அதிபரின் இந்தப் பேச்சால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தற்போது, அதிபர் ஜோ பைடன் செய்தியாளரைத் திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிபரின் இந்த பேச்சுக்கு பத்திரிகையாளர்கள் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளர் பீட்டர் டூசியை தொலைபேசியில் தொடர்ந்து கொண்டு அதிபர் ஜோ பைடன் மன்னிப்பு கேட்டுள்ளார். அப்போது அவர் "நண்பரே.. இதை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்கள் மத்தியில் ஜோ பைடைனுக்கு ஒரு நற்பெயர் இருந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளரை ஒருமையில் திட்டியது அவரது பெயருக்கு அவரே களங்கம் ஏற்படுத்திக் கொள்வதாக அமைந்துள்ளது.