உலகம்

“டெல்டா., ஒமைக்ரானை அடுத்து பரவும் ‘டெல்டாக்ரான்’ வைரஸ்..” : பீதியில் உலக நாடுகள் - அதிர்ச்சி தகவல் !

உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் சைப்ரஸ் நாட்டில் டெல்டாக்ரான் என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“டெல்டா., ஒமைக்ரானை அடுத்து பரவும் ‘டெல்டாக்ரான்’ வைரஸ்..” :  பீதியில் உலக நாடுகள் - அதிர்ச்சி தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவில் முதன் முதலில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இந்த தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து கொரோனா தொற்று இரண்டாவது, மூன்றாவது அலை என பரவி வருகிறது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து டெல்டா, டெல்டா பிளஸ் திரிபு கண்டறியப்பட்டது. இந்த புதிய தொற்றும் உலகம் முழுவதும் பரவியது.

பின்னர் கடந்த நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக ஒமைக்ரான் வைரஸ் என்ற புதிய தொற்று கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாக வரவி வருகிறது. இந்த புதிய தொற்றால் இந்தியாவில் மூன்றாவது அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சைப்ரஸ் நாட்டில் டெல்டாக்ரான் என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை பேராசிரியர் லியோண்டியோஸ் காஸ்ட்ரிக்ஸ் கூறுகையில், “கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் பாதிப்புகள் உள்ளது. இந்த இரண்டு தொற்றும் இணைந்திருப்பதால் இதற்கு டெல்டாக்ரான் என பெயர் வைத்துள்ளோம்.

இந்த புதிய தொற்றால் 25 பேர் போதிக்கப்பட்டுள்ளனர். இது வேகமாக பரவக்கூடியது என்பது குறித்து தீவிரமாகப் பகுப்பாய்வு செய்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் தொற்றே இன்னும் முடிவடையாத நிலையில் புதிதாக டெல்டாக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories