உலகம்

’முட்டைகோஸ் என நினைத்து இறந்த எலியை சாப்பிட்ட ஸ்பெயின் இளைஞர்’ - ரெடிமேட் காய்கறிகளால் வந்த வினை!

உணவு உண்ணும் போது இறந்த எலியின் தலை மட்டும் இருந்தத நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் அரங்கேறியுள்ளது.

’முட்டைகோஸ் என நினைத்து இறந்த எலியை சாப்பிட்ட ஸ்பெயின் இளைஞர்’ - ரெடிமேட் காய்கறிகளால் வந்த வினை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜுவன் ஜோஸ் என்ற இளைஞர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வழக்கம் போல பதப்படுத்தப்பட்ட காய்கறி பாக்கெட்டை வாங்கி வந்து வீட்டில் வைத்து சமைத்திருக்கிறார்.

அப்படியாக வாங்கி வரப்பட்ட பாக்கெட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை பார்க்காமல் அப்படியே சமைக்கவும் செய்திருக்கிறார் அந்த இளைஞர்.

இதனைத் தொடர்ந்து சாப்பிடும் போதும் ஏதோ புதுவிதமாக இருப்பதை உணர்ந்தவர், ஒருவேளை முட்டைகோஸ் போன்ற காய்கறியாக இருக்கும் என தனக்குத்தானே சமாதானம் செய்து சாப்பிடத் தொடங்கி இருக்கிறார்.

அப்போது காய்கறிகள் கொண்ட பவுலில் இரண்டு கண்கள் தெரிவதை பார்த்திருக்கிறார் ஜுவன் ஜோஸ். அதில் இறந்த எலியின் தலைப்பகுதி மட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இதனையடுத்து ரெடிமேட் காய்கறி பாக்கெட்டை விற்ற பிரஞ்சு சூப்பர் மார்க்கெட் மீது நீதிமன்றத்தில் ஜுவன் ஜோஸ் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியுள்ள அந்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகம், காய்கறிகளை உற்பத்தி செய்தவர்களை தொடர்ந்து கொண்டு பேசியிருக்கிறோம். அனைத்து ரெடிமேட் பொருட்களும் முறையாக தயாரித்து விநியோகிக்கப்படுகிறதா எனவும் உறுதிபடுத்தச் சொல்லியிருக்கிறோம் எனக் கூறியுள்ளது.

ரெடிமேட் உணவுப் பொருட்களை கண்மூடித்தனமாக வாங்கி அப்படியே சமைக்காமல் அதில் உள்ளவை என்னென்ன என்பதை ஆராய்ந்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது என பல தரப்பினரும் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories