வைரல்

புத்தாண்டு அதுவுமா குவிந்த ஆணுறை ஆர்டர்.. ஸொமேட்டோ நிறுவனர் வெளியிட்ட அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரம்!

ஆன்லைன் மூலம் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் மேலான ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக ஸொமேட்டோ நிறுவனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

புத்தாண்டு அதுவுமா குவிந்த ஆணுறை ஆர்டர்.. ஸொமேட்டோ நிறுவனர் வெளியிட்ட அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்திருந்த போதும் வீட்டிலேயே கொண்டாடுவதற்காக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதில், ஸ்விக்கி, ஸொமேட்டோ நிறுவனங்களின் உணவு டெலிவரி செய்யும் செயலி மூலம் 2 மில்லியனுக்கும் மேலான பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில், ஸொமேட்டோ நிறுவனர் தீப்பிந்தர் கோயல் முக்கிய புள்ளி விவரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஸொமேட்டோ நிறுவனம் பங்குதாரராக உள்ள பிளின்கிட் (முன்பு க்ரூஃபர்ஸ்) தளம் மூலம் மளிகை பொருட்கள், குளிர் பானங்களுடன் ஆயிரக்கணக்கில் ஆணுறைகளும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறதாம்.

அதன்படி பிளின்கிட் மூலம் புத்தாண்டுக்கு முந்தைய நாள் 33,440 ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் ஒருவர் மட்டுமே 80 ஆணுறைகளை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, 1.3 லட்சம் லிட்டர் சோடா, 43,000 பாட்டில் குளிர்பானங்கள், 6,712 பாக்ஸ் ஜஸ்க்ரீம், 28,240 பாப் கார்க் பாக்கெட்டுகள் புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.

வழக்கமாக 2 வாரங்களில் செய்யப்படும் டெலிவரிகள் ஒரே நாளில் நடந்திருப்பதாக கோயல் தெரிவித்துள்ளார். முன்னதாக 10,000 கொரோனா பரிசோதனை செய்யும் கருவிகளும் பிளின்கிட் மூலம் வாங்கப்பட்டிருப்பதாகவும் கோயல் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories