ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரான யுசாகு மேசாவா விண்வெளி வீரர்களுக்கு உணவு எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 44 வயதாகும் யுசாகு மேசாசா, ஜப்பானில் உள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களுள் ஒருவர். இந்தியாவில் உள்ள பிளிப்காட் போன்ற “ZOZOSUIT” என்ற ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இதுதான் ஜப்பானின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். அதேபோல், பல்வேறு பவுண்டேஷன், கலைப் பொருள் சேமிப்பு மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறார் யுசாகு மேசாவா. முன்னதாக யுசாகு மேசாசா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் "Big Falcon Rocket'' ராக்கெட் மூலம் 2023-ஆம் ஆண்டு நிலவுக்குச் செல்ல இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின.
இந்நிலையில், ரஷிய விண்வெளி வீரரான அலெக்சாண்டருடன் இணைந்து 12 நாள் சுற்றுலாவாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த 8ஆம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளார் யுசாகு. அவர் செல்லும்போது அங்கு விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு (Uber Eats) உபர் ஈட்ஸ் ஆன்லைன் உணவு நிறுவனத்தில் பிரத்யேமாக ஆர்டர் செய்யப்பட்ட சிறப்பு உணவை எடுத்துச் சென்று அங்குள்ளவர்களுக்கு கொடுத்துள்ளார்.
விண்வெளியில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் உணவு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.