உலகம்

"பேச்சாக மட்டுமே இருக்கு ... செயலில் ஒன்றும் காணோம்: உலக தலைவர்களை விளாசிய கிரெட்டா தன்பெர்க்!

காநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் பேசுவது எல்லாம் வெற்று பேச்சாக உள்ளதாக கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.

"பேச்சாக மட்டுமே இருக்கு ... செயலில் ஒன்றும் காணோம்: உலக தலைவர்களை விளாசிய  கிரெட்டா தன்பெர்க்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் யூத் ஃபார் க்ளைமேட் (Youth4Climate) காலநிலை மாற்றத்துக்கான இளைஞர்கள் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதுமிருந்து 190 நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி கிரேட்டா தன்பெர்க்கும் கலந்து கொண்டார். இதில் பங்கேற்று அவர் பேசுகையில், "உலகம் முழுவதுமிருந்து என்னைப் போன்ற இளைஞர்களை உலகத் தலைவர்கள் தேர்வு செய்து அழைத்துவந்து இதுபோன்ற மாநாட்டை நடத்துகின்றனர்.

ஆனால், இதில் நாங்கள் பேசுவதை உலக தலைவர்கள் செவி கொடுத்துக் கேட்கிறார்களா? என்றால் இல்லை. எங்கள் குரல்களுக்குச் செவிசாய்ப்பது போல் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பூமிதான் இருக்கிறது. பிளானட் பி எல்லாம் இங்கே இல்லை. இதைத் தான் நாம் சரிசெய்ய வேண்டும்.

ஆனால், பேசிக்கொண்டே இருந்தால் மட்டும் எதுவும் நடக்காது. இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் என உலக தலைவர்கள் பேசுவதும் அவர்களின் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று வாக்குறுதிகளாக இருக்கின்றன.

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக புதிய யோசனைகள், ஒத்துழைப்பு, மனோதிடம் தேவை என்று உலக தலைவர்கள் பேசுகிறார்கள் தேவி செயலில் இறக்க மறுக்கிறார்கள். உலகம் முழுவதும் 2 % நாடுகள் மட்டுமே பசுமைக் குடில் வாயு குறித்து கவலைப் படுகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories