இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே பா.ஜ.கவைச் சேர்ந்த தலைவர்கள் மாட்டுச் சாணம், கோமியம் குடித்தால் கொரோனா தொற்று வராது என தொடர்ச்சியாக அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களையே கூறிவருகிறார்கள்.
இந்நிலையில், இலங்கையிலும் பா.ஜ.க தலைவர்களைப் போலவே அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வானியராச்சி, சூனியம் மற்றும் மாய மந்திரங்களைப் பயன்படுத்தினால் கொரோனாவில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவர் கடந்த ஜனவரியில் கொரோனா தொற்று ஏற்பட்டபோது, மாந்திரிக மருந்தை சாப்பிட்டதால் நான் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என்றும், இப்படிச் செய்தால் கொரோனா தொற்றிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற முடியும் என அவர் பேசியுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று தினந்தோறும் மூன்றாயிரத்திற்கு மேல் பதிவாகி வரும் நிலையில் சுகாதார அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சுக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வந்ததால், இலங்கை சுகாதாரத்துறை அமைச்சரை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே பதவி நீக்கம் செய்துள்ளார். இருப்பினும் அவருக்குப் போக்குவரத்து அமைச்சகப் பணி வழங்கப்பட்டுள்ளது.