வாட்ஸ் அப்பின் புதிய ப்ரைவசி பாலிசியால் பெரும்பாலான பயனர்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறினர். இதனால் கடுமையான சர்ச்சைகளுக்கும் விமர்சனத்துக்கும் ஆளான வாட்ஸ் அப் நிறுவனம் ப்ரைவசி பாலிசி தொடர்பான அறிவிப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்தது.
அதன்படி, மார்க் ஸக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் வாட்ஸ் அப் நிறுவனம் ப்ரைவசி குறித்த புதிய கொள்கைகளுக்கு மே 15ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது. அதற்குள் தங்களது புதிய கொள்கைகளை ஆராய்ந்து ஒப்புதல் வழங்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தனது பயனர்கள் அனைவருக்கும் இன்று காலை முதலே ஸ்டேட்டஸ் மூலம் விளக்கமளித்துள்ளது வாட்ஸ் அப். இது நெட்டிசன்களியே பெருமளவில் கிண்டல் செய்யப்பட்டு வருவதோடு மீம்ஸ்கள் மூலமும் தீயாக பரப்பி வருகின்றனர்.
பொதுவாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தால் அது அவர்களின் contactல் உள்ளவர்களால் மட்டுமே காண முடியும். ஆனால், வாட்ஸ் அப் நிறுவனத்தின் எண்ணை save செய்யாத போது எப்படி வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸ் தங்களது தெரிகிறது அதுவும் நான்கு ஸ்டேட்டஸ்கள் என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.