உலகம்

கருப்பினத்தவருக்கு ஆதரவாக களமிறங்கிய ட்விட்டர், ஃபேஸ்புக் : ‘அமைதி காக்க முடியாது’ என Netflix ஆவேசம்!

நிறவெறி காரணமாக கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் பரிதாபமாக கொல்லப்பட்டதை எதிர்த்து சமூக வலைதள நிறுவனங்கள் கருப்பு நிறத்தில் லோகோவை மாற்றியுள்ளன.

கருப்பினத்தவருக்கு ஆதரவாக களமிறங்கிய ட்விட்டர், ஃபேஸ்புக் :  ‘அமைதி காக்க முடியாது’ என Netflix ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவின் பிடியில் அமெரிக்கா ஆட்டம்கண்டு வரும் நிலையில், பொருளாதார நெருக்கடி, அதிபர் தேர்தல் என பல்வேறு இக்கட்டான காலத்தை எதிர்நோக்கி இருக்கிறது. இந்த சமயத்தில் நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் உலக அளவில் கவனம் பெற்று வருகின்றன.

கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற இளைஞரை டெரிக் சாவின் என்ற அமெரிக்க போலிஸ் ஒருவர் தனது காலால் மிதித்து கொலை செய்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அமெரிக்க மக்கள் கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், நிற மற்றும் இனவெறிக்கு எதிராகவும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

பலதரப்பு மக்கள் மட்டுமல்லாமல், அமெரிக்காவில் உள்ள போலிஸாரும் இந்தப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக #BlackLivesMatter என்ற ஹேஷ்டேக்கும் #USAonFire என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதனால் ட்ரம்ப் அரசுக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

கருப்பினத்தவருக்கு ஆதரவாக களமிறங்கிய ட்விட்டர், ஃபேஸ்புக் :  ‘அமைதி காக்க முடியாது’ என Netflix ஆவேசம்!

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனமும் கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, தனது நிறுவனத்தின் லோகோவான நீல நிறக் குருவியை கருப்பு நிறத்தில் மாற்றி பதிவேற்றியுள்ளது. மேலும், அதன் பயோவில் #BlackLivesMatter என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

ட்விட்டர் நிர்வாகத்தை போன்று, யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள நிர்வாகமும் தன்னுடைய லோகோவை கருப்பு நிறமாக மாற்றி தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மேலும், அமெரிக்காவின் பல்வேறு ஊடகங்களும் கருப்பு நிறத்தில் தன்னுடைய லோகோவை மாற்றியுள்ளன.

அதேபோல, ஆன்லைன் ஸ்டிரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸும் நிறவெறிக்கு எதிரான தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், “நிறவெறிக்கு எதிராக அமைதியாக இருப்பது அதற்கு உடந்தையாக இருப்பதற்குச் சமம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories