உலகம்

“உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால்...” ஆஸ்கரில் கம்யூனிஸ்ட் அறிக்கை : பெண் இயக்குநரின் துணிச்சல் பேச்சு!

“உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால் எல்லாம் சிறப்பாக வரும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற பெண் இயக்குநர் ஜூலியா ரீச்சர்ட் தெரிவித்துள்ளார்.

“உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால்...” ஆஸ்கரில் கம்யூனிஸ்ட் அறிக்கை : பெண் இயக்குநரின் துணிச்சல் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கியது. விழாவில் முன்னணி திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அதன்படி சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது American Factory-க்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘அமெரிக்க தொழிற்சாலை’ - (American Factory) இந்த ஆண்டுகான ஆஸ்கர் விருது பெற்றது. இந்த படத்தை இயக்கிய மூன்று இயக்குநர்களில் ஜூலியா ரீச்சர்ட் என்ற பெண் இயக்குநரும் ஒருவர்.

விருது அறிவிக்கப்பட்டு மேடையில் பேசிய ஜூலியா ரீச்சர்ட், “உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக வரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள வாசகத்தை சுட்டிக்காட்டினர்.

1848 -ல் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரால் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாசகமே அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்த அறிக்கை சுட்டிக்காட்டியதன் நோக்கம் படத்தின் கரு பொருளுக்கும் ஏற்ப அமைந்திருப்பதே. அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலையில் சீனாவைச் சேர்ந்த தொழிலாளர்கள், சங்கம் அமைப்பது தொடர்பாக இந்த படத்தின் கதை நகர்கிறது.

ரீச்சார்ட், இந்த கருத்து ஆஸ்கரில் வெளிப்படையாக பேசியது, பேசப்படாத ஒரு அரசியலை பதிவு செய்த முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories