உலகம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்? : முடிவுக்கு வராத அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்!

ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்? : முடிவுக்கு வராத அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்கா - ஈரான் பிரச்னை கடந்த சில வாரங்களாகவே முற்றி வருகிறது. குறிப்பாக, ஈரான் இராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான், அமெரிக்காவை பழிவாங்கும் நோக்கோடு ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளவாடங்கள் மீதும், அமெரிக்க தூதரகம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. அந்த தூதரகத்தின் அருகில் இன்று 3 ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. இந்த ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை இராணுவ படை குழுக்கள் நடத்தியிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. எனினும், இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

banner

Related Stories

Related Stories