ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூ சவுத்வேல்ஸ், விக்டோரியா கடற்கரை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ மூன்று மாதமாக நீடித்து வருகிறது.
கடந்த வாரம் முதல் ஏற்பட்ட வெப்பச்சலம் காரணமாக காட்டுத் தீ இன்னும் வேகமாக பரவி வருகிறது. இந்த தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
காட்டுத் தீயால் 8 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு கருகி நாசமாகி உள்ளது. இதனிடையே, நியூ சவுத்வேல்ஸ், விக்டோரியா ஆகிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. இந்த தீயில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை 23 ஆக அதிகரித்துள்ளது.
அதேப்போல் காடுகளில் இருந்த வன விலங்குகள் லட்சக்கணக்காக இறந்திருக்ககூடும் என கருதப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், காட்டுத் தீயினால், கிப்ஸ்லேண்ட் பகுதியில் வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. இதனால் காடுகளில் உயிரிவாழ்ந்த விலங்குகள் தண்ணீர் இன்றி தவித்து வருகின.
காட்டுத் தீயில் தப்பித்த உயிரினங்கள் சாலையோரம் செல்லும் வாகன ஓட்டிகளிடம் நீர் கேட்கும் சோக சம்பவம் வீடியோவாக வெளிவந்தது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பல்வேறு வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சூழலியாளர்கள் தீ பிடிக்கும் இடத்திற்குச் சென்று அங்கு தீக்காயத்துடன் இருக்கும் விலங்குகளை மீட்டு பராமரித்து வருகின்றனர்.
மேலும் தண்ணீர் இன்றி வெப்பத்தால் வாடும் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கொடுத்தும் வருகின்றனர். இந்நிலையில் கிப்ஸ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் காட்டுத் தீயில் சிக்கிய விலங்குகளை காப்பாற்றுவதற்கு சென்றார்.
அங்கு கங்காருவை காப்பாற்றி அழைத்தவந்தபோது, அதில் ஒரு கங்காரு மனிதர்கள் கஷ்டமான நாட்களில் தமக்கு ஆறுதல் அளிக்கவரும் நபர்களை எப்படி கட்டியணைத்து தனது ஆதங்கத்தையும், மன அழுத்தையும் வெளிப்படுத்துவார்களோ, அதேபோல் அந்த கங்காருவும் அந்த பெண்ணை கட்டியணைத்து தனது மன அழுத்தத்தை வெளிப்படுத்தியது.
இந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. மேலும் அந்த நிகழ்வை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அதேபோல், மற்றொரு பெண் காட்டித்தீயில் சிக்கிக்கொண்டு உடல் முழுவதும் தீக்காயத்துடன் கோலா கரடி ஒன்று அவதிப்படுவதைப் பார்த்து தனது ஆடையை கழற்றி அந்த கரடியை மீட்டு சிகிச்சை அளித்து வருகிறார்.
அந்த வீடியோவும் சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகின்றது. தீயை அணைக்கும் வீரர்களின் கால்களை கட்டியணைப்பது போலவும் புகைப்படம் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்டுத்தீக்கு பருவநிலை மாற்றம் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பாட்டாலும், அதனை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றேத் தோன்றுகிறது. கோலா கரடி மற்றும் அரியவகை உயிரினங்களும் பல லட்ச மரங்களும் சாம்பலாகியுள்ளன.
மூன்று மாதமாக எரியும் தீயை அணைக்காமல் தீ வேகமாக பரவி பெரும் பேரிழப்பை ஏற்படுத்திய பிறகு தீ அணைக்க முயற்சி எடுப்பது அரசின் தோல்வி முகத்தையே காட்டுகிறது.
இந்த காட்டுத்தீ ஆஸ்திரேலியா நாட்டுக்கும் ஏற்பட்ட இழப்பு அல்ல, ஒட்டுமொத்த உலகத்திற்குமானது. எனவே வளரும் நாடுகள் வல்லரசு நாடுகள் இந்த தீயை அணைக்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துவருகிறது.