பொதுவாக மிருகங்கள் அதனுடைய இடத்தில் மட்டுமே வசிக்கும். ஆனால் அதனுடைய இடத்தை விட்டு வெளியே வந்தால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அது அமையும். சிறுத்தைகள், புலிகள், யானைகள் உள்ளிட்டவை இதில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இவை போன்ற விலங்குகள் தங்கள் இடத்தை விட்டு ஊருக்குள் புகுந்தால், அது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தற்போதும் அதே போல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் கங்கை நதியில் இருந்து ராட்சத முதலை ஒன்று வெளியே வந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். நீண்ட நிமிடங்களுக்கு பிறகு அதனை வனத்துறையினர் பிடித்து, மீண்டும் நதியிலேயே விட்டு விட்டனர்.
அதாவது உத்தர பிரதேசத்தில் புலந்தசகர் (Bulandshahr) என்ற பகுதியில் அமைந்துள்ளது பாலத்திற்கு கீழ் கங்கை நதி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கிருந்து சுமார் 10 அடி உயரம் கொண்ட ராட்சத முதலை ஒன்று தப்பித்து வெளியே வந்துள்ளது. பிறகு அது மீண்டும் தனது இருப்பிடத்திற்கு செல்ல முயன்று அந்த பகுதியின் மக்கள் நடைபாதையில் அமைந்திருந்த கம்பியை தாண்ட முயன்றுள்ளது.
ஆனால் அந்த முதலையால் அந்த கம்பியை தாண்டி குதிக்க முடியாத நிலையில், நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் பலரும் அலறியடித்து ஓடிய நிலையில், ஒரு சிலர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உடனடியாக அந்த ராட்சத முதலையின் வாயை கட்டி, ஒரு கயிற்றைக் கொண்டு அந்த முதலையை கங்கை நதிக்குள் அனுப்பினர்.
முதலை அந்த கம்பியை தாண்ட முயற்சிக்கும் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் தக்க நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.