வைரல்

”அரசு பள்ளியில் படித்தவன்.. Average Student”: வைரலாகும் Chandrayaan 3 சாதனை நாயகன் வீர முத்துவேல் வீடியோ!

சந்திரயான் 3 திட்ட இயக்குநராக வீர முத்துவேல் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

”அரசு பள்ளியில் படித்தவன்.. Average Student”: வைரலாகும் Chandrayaan 3 சாதனை நாயகன் வீர முத்துவேல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமியின் நீள்வட்டப் பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3ன் உயரம் 5 கட்டங்களாக படிப்படியாக உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி உந்தப்பட்டது.

பின்னர் ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. ஆகஸ்ட் 17ஆம் தேதி உந்துவிசைக் கலனிலிருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. ஏற்கனவே நிலவின் சுற்றுப்பாதையில் இயங்கி வரும் சந்திரயான் 2-ன் ஆர்பிட்டரின் தகவல் தொடர்பு அமைப்புடன் விக்ரம் லேண்டர் இணைக்கப்பட்டது. பின்னர் லேண்டரின் உயரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றி கரமாக தரையிறங்கியது. இந்த வரலாற்று வெற்றியை நாடே கொண்டாடியது. இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது மேலும் சிறப்பு.

இந்நிலையில் சந்திரயான் 3 திட்ட இயக்குநராக வீர முத்துவேல் நியமிக்கப்பட்டபோது அவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், "அரசு பள்ளியில் 10 வகுப்பு வரை படித்தேன். நான் ஒரு Avaerage Student தான். எனது குடும்பத்தினருக்குப் படிப்பைப் பற்றி பெரிய அளவில் தெரியாது. நண்பர்களுடன் சேர்ந்து Diploma In Mechanical Engineering படித்தேன் அப்போது எனக்கு Engineering மீது ஆர்வம் வந்தது. 90% மதிப்பெண்களும் பெற முடிந்தது.

அதன் பின்னர், BE, ME என்று அனைத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். இதற்காக முழு நேரமும் படித்துக்கொண்டே இருக்க மாட்டேன். படிக்கும் பொழுது 100% கவனம் செலுத்திப் படித்ததிலேயே என்னால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. பின்னர் Lakshmi Mission Works - ல்Senior Engineer ஆக பணியாற்றினேன்.

”அரசு பள்ளியில் படித்தவன்.. Average Student”: வைரலாகும் Chandrayaan 3 சாதனை நாயகன் வீர முத்துவேல் வீடியோ!

அப்போது எனக்கு Airo Space Reserach மீது ஆர்வம் வந்தது. தொடர்ந்து Hindustan Aeronautics Divisionல் Design Engineer ஆக பணியாற்றினேன் கொண்டிருந்தேன். சில காலங்களுக்கு பின்னர் எனது கனவு Project ஆன, ISRO வில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே முதலில் Project Engineer ஆகவும், அதனை தொடர்ந்து Project Manager ஆகவும் பல Remote Science and Scientific Satellite ல் பணிபுரிந்துள்ளேன்.

Mars Orbiter Mission லும் வேலைபார்த்துள்ளேன். ISRO 1st Nano Satilite Teamஐ lead செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 3 Nano Satilite Launch செய்துள்ளோம். Associate Project Director ஆக Chandrayaan 2 Missionஐ நிறைவு செய்துள்ளேன். இப்பொது ISRO வின் Higher Management எனக்கு Chandrayaan 3 ல் பணிபுரிய வாய்ப்பளித்துள்ளது. நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் இவ்வளவு தூரம் வர முடியும் என்றால் எல்லோராலையும் முடியும். Opportunity Ellarkum இருக்கு, அத எப்படி பயன்படுத்துறோம் என்பது நம்ம கைலதான் இருக்கு. Hardwork Will Never Go Unrewarded" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories