ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் டியூஷன் செல்வதற்காக 4வது மாடியிலிருந்து லிப்ட் மூலமாகக் கீழே வந்துள்ளான். அப்போது லிப்ட் திடீரென பழுதாகி நின்றுள்ளது. மேலும் சிறுவன் மட்டும் தனியாக இருந்துள்ளார். முதலில் பதற்றமடைந்த சிறுவன் தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட்டுள்ளனர்.
ஆனால் அவர் கத்துவது வெளியே யாருக்கும் கேட்கவில்லை. மேலும் லிப்ட் பழுதாகி நின்றது பற்றியும் யாருக்கும் தெரியவில்லை. பின்னர் சிறுவன் எதற்கும் பயப்படாமல் லிப்டிலேயே அமர்ந்து வீட்டுப்பாடத்தை எழுது தொடங்கியுள்ளான்.
நீண்ட நேரமாகியும் மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவனது பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது தான் மகன் லிப்டில் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. பிறகு உடனே லிப்ட் பராமரிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு பழுது சரிபார்க்கப்பட்டது.
பின்னர் லிப்ட் மீண்டும் இயங்கியது. பிறகு லிப்ட் திறந்து உடன் சிறுவன் அமைதியாக அமர்ந்து கொண்டு வீட்டுப்பாட்டம் எழுதிக் கொண்டிருந்ததைப் பார்த்துப் பெற்றோர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் ஆச்சரியப்பட்டனர். இதையடுத்து பதற்றமடையாமல் 2 மணி நேரம் இருந்த சிறுவனைப் பாராட்டினர்.