வைரல்

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? - தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய விளக்கங்கள் இதோ!

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என Paytm அறிவித்துள்ளது.

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? - தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய விளக்கங்கள் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே Google Pay, Phone Pay, Paytm, Amazon Pay போன்ற Unified Payments Interface (UPI) app-க்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில், கட்டணம் எதுவுமின்றி சிறிய தொகைகளை பரிமாற்றம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த ஆப்ஸ்கள் சலுகைகள் மற்றும் கூப்பன்களை வழங்குவதால் அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் UPI ஆப்ஸ் மூலம் ரூ.2000க்கு மேல் வணிக பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் 1.1% கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என ஆப்ஸ் நிறுவனங்களுக்கு NPCI (National Payments Corporation ) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? - தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய விளக்கங்கள் இதோ!

அதில், UPI கட்டண பரிவர்த்தனைகளில் 0.5 % முதல் 1.1 % வரையிலான பரிமாற்றக் கட்டணங்கள் விதித்துக் கொள்ளலாம் என்றும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கட்டணங்களில் 0.5 %, தொலைத்தொடர்பு, பயன்பாடுகள், தபால் அலுவலகம், கல்வி மற்றும் விவசாய நோக்கங்களுக்காக 0.7 %, பல்பொருள் அங்காடிகளில் 0.9% மற்றும் பரஸ்பர நிதிகள், அரசாங்கம், காப்பீடு மற்றும் ரயில்வே ஆகியவற்றில் 1% பரிமாற்றக் கட்டணங்கள் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் நபருக்கு நபர் மற்றும் நபருக்கு வணிகர் பரிவர்த்தனைகள் வங்கியிலிருந்து PPI வாலட்டுக்கு இடையே இருந்தால் பரிமாற்றக் கட்டணங்கள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? - தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய விளக்கங்கள் இதோ!

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து வாடிக்கையாளர்களுக்குப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் எப்படி இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்ற கேள்வியையும் வாடிக்கையாளர்கள் எழுப்பினர்.

இதையடுத்து NPCI தெளிவான விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில் பரிமாற்றக் கட்டணங்கள் UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. மேலும் வங்கிக் கணக்கிலிருந்து வங்கிக் கணக்கு அடிப்படையிலான UPI செலுத்துதல்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை" என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆனால் வணிகர் QR குறியீடுகள் மூலம் செய்யப்படும் டிஜிட்டல் வாலட் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக் கட்டணம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை, ஏனெனில் இது ரூ.2,000க்கு மேல் செலுத்தினால் மட்டுமே கட்டணம் உள்ளதால் அது இவர்களைப் பாதிக்காது.

அதேநேரம் இந்த கூடுதல் கட்டணத்தை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வழங்க முடிவு செய்தால் இது வாடிக்கையாளர்களைப் பாதிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories