இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே Google Pay, Phone Pay, Paytm, Amazon Pay போன்ற Unified Payments Interface (UPI) app-க்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில், கட்டணம் ஏதுமின்றி சிறிய தொகைகைளை பரிமாற்றம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த ஆப்ஸ்கள் சலுகைகள் மற்றும் கூப்பன்களை வழங்குவதல் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளது.
இந்நிலையில் UPI ஆப்ஸ் மூலம் ரூ.2000க்கு மேல் வனிக பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என NPCI அறிவித்துள்ளது பயனர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதேநேரம், நபருக்கு நபர் மற்றும் நபருக்கு வணிகர் பரிவர்த்தனைகள் வங்கியிலிருந்து PPI வாலட்டுக்கு இடையே இருந்தால் பரிமாற்றக் கட்டணங்கள் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, UPI கட்டண பரிவர்த்தனைகளில் 0.5 சதவீதம் முதல் 1.1 சதவீதம் வரையிலான பரிமாற்றக் கட்டணங்கள் விதிக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கட்டணங்களில் 0.5 %, தொலைத்தொடர்பு, பயன்பாடுகள், தபால் அலுவலகம், கல்வி மற்றும் விவசாய நோக்கங்களுக்காக 0.7 %, பல்பொருள் அங்காடிகளில் 0.9% மற்றும் பரஸ்பர நிதிகள், அரசாங்கம், காப்பீடு மற்றும் ரயில்வே ஆகியவற்றில் 1% பரிமாற்றக் கட்டணங்கள் இதில் அடங்கும்.
இந்தக் கட்டணங்கள் ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வரும். மேலும் செப்டம்பர் 30, 2023க்குள் இந்த விலைகளை மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் NPCI அறிவித்துள்ளது. Google Pay, Phone Pay, Paytm, Amazon Pay போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்தி வருபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.