instagram, TikTok போன்ற சமூக ஊடகங்கள் வந்த பிறகு 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' போன்ற வீடியோக்கள் வைரலானது. 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' என்பது நன்றாகக் குளிர்ந்த ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து அதை ஊற்றிக் கொண்டு, வீடியோ எடுத்து தனது நண்பர்கள் அல்லது வேறு யாருக்காவது இதுபோன்று செய்ய முடியுமா என்று சவால் விடுவார்கள். இப்படிப் பல சேலஞ்ச் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும்.
அந்தவகையில் தற்போது ஷவர் குளியலின் போது ஆரஞ்சு பழம் சாப்பிடும் வீடியோ தற்போது TikTok சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பார்க்கும் பலரும் தாங்களும் ஷவர் குளியலின் போது ஆரஞ்சு பழம் சாப்பிடுவது போன்று வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
இப்படியான வீடியோ வைரலாவதற்கு காரணம் TikTokபயனர் @au.stino என்பவர் 2022ம் ஆண்டு அன்று ஷவரில் பழங்களைச் சாப்பிடுவது ஏன் என்று தனது நண்பர்களுக்கு விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இருப்பினும் இப்படி குளியல் குறையில் சாப்பிடுவதற்குப் பலரும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எல்லாம் முன்பாகவே 2015ம் ஆண்டு Reddit இணையத்தில் ஷவர் ஆரஞ்ச் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளிவந்துள்ளது. இதில் பலரும் ஆரஞ்சு சாப்பிடும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தற்போது ஷவரில் ஆரஞ்சு பழம் சாப்பிடும் வீடியோ வைரலானதை அடுத்து இணைய வாசிகள் பலரும் அதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகளை என்ன என்று விவாதித்து வருகின்றனர்.