விளையாட்டு

Messi.. Messi.. 80 ஆயிரம் ரசிகர்களின் முழக்கத்தால் அதிர்ந்த மைதானம்.. உணர்ச்சிகரமான Goosebumps தருணம் !

கிளப் மற்றும் சர்வதேச அணிக்காக 800 கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

Messi.. Messi.. 80 ஆயிரம் ரசிகர்களின் முழக்கத்தால் அதிர்ந்த மைதானம்.. உணர்ச்சிகரமான Goosebumps தருணம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.

அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

Messi.. Messi.. 80 ஆயிரம் ரசிகர்களின் முழக்கத்தால் அதிர்ந்த மைதானம்.. உணர்ச்சிகரமான Goosebumps தருணம் !

முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.

Messi.. Messi.. 80 ஆயிரம் ரசிகர்களின் முழக்கத்தால் அதிர்ந்த மைதானம்.. உணர்ச்சிகரமான Goosebumps தருணம் !

அர்ஜென்டினாவிலும் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்தது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பியதும் அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்ற அர்ஜென்டினா வீரர்களும் திறந்த வெளி பேருந்தில் உலகக்கோப்பையை வைத்து ரசிகர்களிடையே ஊர்வலம் சென்றனர்.

அதனை தொடர்ந்து தற்போது உலகக்கோப்பையை வென்ற பின்னர் அர்ஜென்டினா அணி தனது முதல் சர்வதேச போட்டியை அர்ஜென்டினாவில் தலைநகரான பியூனஸ் அயர்ஸ்ஸில் உள்ள எல் மானுமெண்டல் மைதானத்தில் பனாமா அணிக்கு எதிராக ஆடியது.

இந்த மைதானத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கூடி உலகக்கோப்பையை வென்ற தங்கள் அணியை உற்சாகப்படுத்தினர். போட்டிக்கு முன்னதாக சாம்பியன் என்று பொறிக்கப்பட்ட மிகப்பெரிய ஜெர்சி மைதானத்தை அலங்கரிக்க அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி கோல் கீப்பர் மார்ட்டினெஸ் உள்ளிட்டோர் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினர். ரசிகர்களின் கரகோஷத்தால் மைதானமே அதிர்ந்தது.

அதனைத் தொடர்ந்து போட்டி தொடங்கியதும் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. ஆனால் ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் பனாமா மெஸ்ஸியை தடுக்க அதில் மெஸ்ஸிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டியது. ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடினார். அதன்பின்னர் இரண்டாம் பாதியில் 77வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை கோலாக்கி அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார் அல்மாடா.

அதன்பின்னர் 88வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வைப்பில் மெஸ்ஸி கோலடித்து அசத்த மைதானமே மெஸ்ஸி மெஸ்ஸி என்ற கோஷத்தால் அதிர்ந்தது. இறுதியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் கிளப் மற்றும் சர்வதேச அணிக்காக 800 கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். முதல் இடத்தில் ரொனால்டோ இருக்கும் நிலையில், அவரை விட குறைவான போட்டிகளில் 800 கோல் அடித்து அவரின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த போட்டி முடிந்தபின்னர் அர்ஜென்டினா அணி மைதானத்தைச் சுற்றி உலகக்கோப்பையுடன் வலம் வந்தது. ஒவ்வொரு வீரரும் உலகக்கோப்பையின் மாதிரியை கையில் வைத்து ரசிகர்களை நோக்கி வளம்வர மைதானம் முழுக்க உற்சாக அலை கரைபுரண்டோடியது. .

banner

Related Stories

Related Stories