வைரல்

“புகைப்பிடிப்பதை விட ஆபத்து.. தனிமை மற்றும் கவலையாக இருந்தால் வயது அதிகரிக்கும்”: ஆய்வில் பகீர் தகவல்!

புகைப்பிடிப்பதைக் காட்டிலும், தனிமையாக இருப்பதும், கவலையாக இருப்பதும், வயதாகுவதை அதிகரிக்கச் செய்கிறது என தெரியவந்துள்ளது.

“புகைப்பிடிப்பதை விட ஆபத்து.. தனிமை மற்றும் கவலையாக இருந்தால் வயது அதிகரிக்கும்”: ஆய்வில் பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்றைய நவீன உலகத்தில் நம்மை அறியாமல் சில பிரச்சனைகளை விரும்பி ஏற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதில் முக்கியமானது தனிமை. அந்த தனிமை எப்படி நிகழ்கின்றது என்றால், அருகில் இருக்கும் வீட்டுக்காரர் யார் என்பது கூட தெரியாத அளவிற்கு தனிமை நாடியுள்ளோம்.

இது ஒருவகையான தனிமை மட்டுமே. இன்னும் சில தனிமை இருக்கிறது. கூட்டமாக இருந்திருப்போம். ஆனால் தனிமையாக உணருவார்கள். யாருடைய கவனமும் இல்லாமல் இருப்பதாக உணருவது மற்றொரு தனிமை மனநிலையாகும்.

“புகைப்பிடிப்பதை விட ஆபத்து.. தனிமை மற்றும் கவலையாக இருந்தால் வயது அதிகரிக்கும்”: ஆய்வில் பகீர் தகவல்!

நவீன வாழ்க்கையில் குழுவுடன் வாழும் பழக்க வழங்கங்களை மறந்து விலகிக்கொண்டே செல்கின்றோம். குறிப்பாக, தனக்கு தேவையான தேடலுக்காக நேரத்தில் ஏற்படும் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால் பல நேரங்களில் குழு வாழ்வியல் பலருக்கும் எரிச்சலை தருகிறது.

அதன்விளைவாக பலரும் தங்களின் கண்ணீரை தேக்கி வைத்துக்கொள்வதும் நிகழ்கிறது. இதனால் ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை, அவநம்பிக்கை உருவாகிறது. இந்த தனிமை சில நேரங்களில் மனிதனை சோர்வடைய செய்து அவர்கள் வாழ்வை அழிக்கிறது.

இவையெல்லாம், உண்மை என நிருபிக்கும் வகையில், சில அறிவியல் ஆய்வுகள் வெளிவந்துள்ளது. அந்தவகையில், புகைப்பிடிப்பதைக் காட்டிலும் தனிமையாக இருப்பதும், கவலையாக இருப்பதும் வயதாகுவதை அதிகரிக்கச் செய்கிறது என தெரியவந்துள்ளது.

“புகைப்பிடிப்பதை விட ஆபத்து.. தனிமை மற்றும் கவலையாக இருந்தால் வயது அதிகரிக்கும்”: ஆய்வில் பகீர் தகவல்!

Deep Longevity என்ற சீன நிறுவனம் ஒன்று, சுமார் 1200 சீன வயதானவர்களிடம் உளவியல் காரணங்களால் எப்படி வயது அதிகரிக்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் Ageing Clock டிஜிட்டல் புள்ளிவிவர மாதிரி அடிப்படையில், அவர்களின் ரத்த மாதிரிகளை பெற்று ஆய்வை முன்னெடுத்துள்ளது.

இந்த ஆய்வில் புகைப்பிடிப்பவர்களின் பழக்கவழக்கங்களை காட்டிலும் தனிமையாக, கவலையாக வாழ்பவர்களின் வயது அதிகரிக்கிறது என அம்முடிவுகளில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆராய்ச்சி முடிவில்,

“புகைப்பிடிப்பதை விட ஆபத்து.. தனிமை மற்றும் கவலையாக இருந்தால் வயது அதிகரிக்கும்”: ஆய்வில் பகீர் தகவல்!
  • புகைபிடிப்பவர்களின் வயதாகும் காலம் 1.25 ஆண்டுகள் அதிகமாகவுள்ளது.

  • ஆனால் தனிமையாக இருப்பது போன்ற உணர்வோடும் இருக்கும் நபர்களுக்கு வயதாகுக் காலம் 1.65 ஆண்டுகள் வரை வேகமாக உயருகிறது.

  • இதில் தனிமை மட்டும் வயதை அதிகமாக்கமால், பயம், நம்பிக்கையின்மை, மன அழுத்தம், சந்தோசமின்மை மற்றும் குறைந்த தூக்கம் போன்ற காரணங்களினால் உளவியல் சிக்கலுடன் சோர்ந்து வயது மூப்பு அதிகரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

  • அதுமட்டுமல்லாது, திருமணம் ஆகாமல் தனிமையாக இருக்கும் நபர்களுக்கு வயதாகும் காலம் 0.35 ஆக உள்ளது.

இதன் மூலம் புகைப்பிடிப்பதைக் காட்டிலும், தனிமையாக இருப்பவர்களுக்கு வயதாகும் காலம் அதிகரிப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories