இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமாக உள்ள மாருதி சுசூகி நிறுவனம் புதிய மேம்பட்ட வசதிகளுடன் பிரபல பிரீஸா காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் எலக்ட்ரானிக் சன் ரூப், கானெக்டெட் கார் போன்ற புதிய வசதிகள் இடம்பெற்றுள்ளன
6 கலர்களில் வெளியாகும் இந்த காரில் 3 புதிய டூயல் டோன் கலர் ஆப்ஷன்களை இடம்பெற்றுள்ள நிலையில் இதன் வெளிப்புற டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 7.99 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் தொடங்கி 13.96 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இந்த காரில் கனெக்ட்டிங் கார் வசதி, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், HUD டிஸ்பிலே, ஆம்பிஎண்ட் லைட்டிங், USB சார்ஜிங், அலெக்ஸா சப்போர்ட், சன் ரூப் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 6 ஏர் பேக், ESP, ABS, EBD, 360 டிகிரி கேமரா வசதி, ஹில் ஹோல்டு அஸ்சிஸ்ட் போன்ற முக்கிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
LXi, VXi, ZXi, ZXi+ என நான்கு ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரில் 1.5 இன்ச் லிட்டர் K15C பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. காரின் பவர் 103 BHP மற்றும் டார்க் 137 NM என உள்ளதோடு காரில் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரீஸா கார் இந்திய சந்தையில் அதிகம் வரவேற்பை பெற்ற கார் என்பதால் அதன் மேம்படுத்தப்பட்ட இந்த வகை கார் அதே வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாருதி சுசூகியின் விற்பனையை விட டாடா நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த காரின் மூலம் டாடா நிறுவனத்திடம் இழந்த தனது சந்தையை மாருதி சுசூகி பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.