வைரல்

“தந்தை உயிரிழந்த சோகத்திலும் தேர்வெழுத வந்த 12 மாணவி..” : கமுதியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தந்தை உயிரிழந்த சோகத்திலும் 12 மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்தசம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தந்தை உயிரிழந்த சோகத்திலும் தேர்வெழுத வந்த 12 மாணவி..” :  கமுதியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சுமைத்தூக்கும் தொழிலாளி முத்துப்பாண்டியின் மகள் முத்துமாரி. இவர் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வறுமையின் காரணமாக மாணவி மிகுந்த கவனமுடன் படித்துக்கொண்டே, வீட்டில் இருக்கும் வேலைகளை செய்துவருவதாகவும் அக்கம் பக்கத்தினர் பாராட்டும் வகையில் சிறப்பாக முறையில் படித்து வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த சில நாட்களாக முத்துப்பாண்டி உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் வீட்டில் முத்துப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, முத்துப்பாண்டிக்கு இறுதி சடங்கை இன்று நடந்த உறவினர்கள் திட்டமிட்டனர். 12ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தந்தையின் மரணம் முத்துமாரிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று வரலாறு தேர்வு நடைபெற்ற நிலையில், தந்தையின் ஆசைப்படி படித்து பெரிய பொறுப்பிற்குச் செல்லவேண்டும் என்ற லட்சியத்தோடு, தந்தை உடல் இறுதி மரியாதைக்கு வீட்டில் வைக்கப்பட்ட சூழலிலும் தேர்வு எழுத சென்றுள்ளார் முத்துகுமாரி.

முத்துகுமாரி, மிகுந்த சோத்துடன் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதினாலும், தந்தையின் ஆசைக்காக மன தைரியத்துடன் தேர்வை எழுதியுள்ளதாக அவரது வகுப்பு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேர்வை முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு, பின்னர் தந்தையின் இறுதி நிகழ்ச்சிக்கு சென்றது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories