வைரல்

சே குவேராவை சுட்டுக்கொன்ற பொலிவியா ராணுவ வீரர் மரணம்... யார் இந்த மரியோ டெரான்?

மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சே குவேராவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் என அறியப்படும் பொலிவியா ராணுவ வீரர் மரியோ டெரான் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சே குவேராவை சுட்டுக்கொன்ற பொலிவியா ராணுவ வீரர் மரணம்... யார் இந்த மரியோ டெரான்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சே குவேராவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் என அறியப்படும் பொலிவியா ராணுவ வீரர் மரியோ டெரான் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சே குவேரா உலக நாடுகளில் நிலவும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தார். வெனிசுலா, கொலம்பியா, பிரேசில், க்யூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போரில் ஈடுபட்டு அந்நாட்டு மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தவர்.

அதன் தொடர்ச்சியான பொலிவியாவின் விடுதலைக்காக தயாராகிக்கொண்டிருந்த சே குவேராவைப் பிடிக்க அமெரிக்கா முனைப்புக் காட்டியது. அதன்பின்னர் 1967ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி, வனப்பகுதியில் இருந்த சே குவேராவை அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகளின் உதவியுடன் பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துப் பிடித்தது.

பின்னர் அடுத்தநாளே அமெரிக்கா விடுத்த உத்தரவினால் சே குவேரா கொல்லப்பட்டார். இந்நிலையில் சேகுவேராவைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் என பொலிவியா ராணுவ வீரர் மரியோ டெரான் என்பவர் அறியப்பட்டார். நாளில் சே குவேராவைக் கொன்றதற்கான தனது வருத்ததை மரியோ டெரான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பொலிவிய ராணுவ வீரர் மரியோ டெரான் தற்போது உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இந்தச் செய்தியை அவரது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

banner

Related Stories

Related Stories