தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள், ஈரான் நாட்டிற்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அங்கு எல்லை தாண்டிச் சென்றதாகக் கூறி, பஹ்ரைன் கடலோரக் காவல் படையினர் அவர்களை கடந்த செப்டம்பர் 11ஆம் நாள் அன்று கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்ததும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மீனவர்களின் நிலையை சுட்டிக்காட்டி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரின் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுருந்தார்.
இந்நிலையில், பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 28 தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம், 6 மாதத்திலிருந்து 3 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.