வைரல்

ஆர்டர் செய்ததோ IPHONE .. வந்ததோ HAND WASH: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் - தொடரும் ஆன்லைன் மோசடி!

ஆர்டர் செய்த iPhoneக்கு பதில் பார்சலில் ஹேண்ட் வாஷ் இருந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

ஆர்டர் செய்ததோ IPHONE .. வந்ததோ HAND WASH: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் - தொடரும் ஆன்லைன் மோசடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கௌலா லாஃப்கெய்லி. இவர் சில நாட்களுக்கு முன்பு iPhone 13 Pro Max என்ற செல்போனை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்த செல்போனின் மதிப்பு ரூ.1 லட்சத்து 29 ஆயிரமாகும்.

இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு பார்சல் வந்துள்ளது. இதைப் பிரித்துப் பார்த்தபோது iPhoneக்கு பதிலாக ஹெண்ட் வாஷ் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அந்த பெண் சம்மந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்திடம் புகார் செய்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்தியதில் ஆர்டரை டெலிவரி செய்த நபர்தான் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட டெலிவரி நிறுவனம் அவரிடம் விசாரணை செய்து வருகிறது. இப்படி நடப்பது இது முதல்முறையல்ல.

அண்மையில் கூட கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஆர்டர் செய்த ஐ போனுக்கு பதில் சோப்பு கட்டி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஆன்லைனில் ஆர்டர் செய்து வரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories