இந்தியாவில், அண்மையில் I Phone ஆர்டர் செய்தவருக்கு சோப்பு கட்டி வந்ததைப் போன்று இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டேனியல் கரோல் என்பவர் அண்மையில் iPhone 13 pro max போனை ஆன்லைன் தளம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார்.
போன் ஆர்டர் செய்து இரண்டு வாரங்கள் ஆகியும் வராததால் அந்த ஆன்லைன் தளத்தை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் கடந்த வாரம் டேனியல் ஆர்டர் செய்திருந்த பார்சல் வீட்டிற்கு வந்துள்ளது. பிறகு பார்சலை பிரித்துப் பார்த்தபோது iPhone க்கு பதில் இரண்டு சாக்லேட் இருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த செல்போனின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும்.
இது குறித்து டேனியல் சம்மந்தப்பட்ட டெலிவரி நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதில், ஆர்டர் செய்த iPhoneக்கு பதில் கிறிஸ்துமஸ் பரிசாக சாக்லேட் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.