வைரல்

பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ரூ.1.4 லட்சத்திற்கு online shopping செய்த 2 வயது சிறுவன்!

தவறுதலாக செல்போனில் ரூ.1.4 லட்சத்திற்கு 2 வயது குழந்தை ஆன்லைனில் ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ரூ.1.4 லட்சத்திற்கு online shopping செய்த 2 வயது சிறுவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் மது. இவர் தனது செல்போனில் ஆன்லைன் வழியாகப் பொருட்களை ஆர்டர் செய்வது வழக்கம். இதனால் இவரது செல்போனில் ஆன்லைன் ஆர்டர் செய்வதற்கான செயலி எப்போதும் இயக்கத்தில் இருக்கும்.

இந்நிலையில் இவரது வீட்டிற்கு ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் டெலிவரி செய்வதற்காக குவிந்துள்ளது. இதைப் பார்த்து அவர் இதை நாங்கள் ஆர்டர் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

பின்னர், தனது வால்மார்ட் கணக்கைப் பரிசோதனை செய்தபோது ரூ.1.4 லட்சத்திற்கு விலை உயர்ந்த நாற்காலிகள், பூக்கூடைகள் என பல பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து இந்த அனைத்து பொருட்களையும் தனது 2 வயது மகன் தவறுதலாக ஆர்டர் செய்ததைக் கண்டறிந்துள்ளார். மகனின் இந்த குறும்புத்தனத்தால் பெற்றோர்களுக்குத் தேவையில்லாமல் ரூ.1 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை பிரமோத் குமார், "எப்படி இவ்வளவு பொருட்களையும் ஆர்டர் செய்தார் என்பது தெரியவில்லை. இனி மகனுக்குத் தெரியாத வகையில் பாஸ்வர்டை பயன்படுத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories