விலங்குகளின் அசாத்திய திறனைக் கண்டு புது புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் மனிதர்களை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவது வழக்கம்.
அவ்வகையில், இரண்டு ஓடும் ரயில்களுக்கு இடையே சிக்கிய குதிரை அதன் நேர்கொண்ட பார்வையையும் ஓடும் வல்லமையையும் வைத்து எப்படி அங்கிருந்து தப்பித்தது என்பதற்கான சாட்சியாக உள்ளது IPS அதிகாரி திபான்ஷு கப்ரா பகிர்ந்த வீடியோ.
எகிப்து நாட்டில் இந்த மாத தொடகத்தில்தான் இந்த நிகழ்வு நடந்திருப்பதாக டெய்லி மெயில் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோவில் வெள்ளை குதிரை ஒன்று இருபுறமும் ஓடும் ரயிலுக்கு இடையே ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் ஓடும் ரயிலில் சிறிதளவு கூட சிக்கி காயம் ஏற்படுத்திக் கொள்ளாமல் சீரான ஓட்டத்தை கடைப்பிடித்து ஒரு புறம் ரயில் சென்றதும் அந்த தண்டவாளத்தை கடந்து செல்கிறது அந்த வெள்ளை குதிரை.
இதனை ரயில் இருந்தவர்கள் பார்த்து பதறிப்போய் எப்படி அந்த குதிரை தப்பிக்க போகிறது என்ற ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குதிரையின் இந்த செயல், இக்கட்டான சூழலில் சிக்கும் போது சீரான பாதையில் கவனச் சிதறல் இல்லாமல் இலக்கை செலுத்தினால் எந்த இடர்பாடுகளிலும் மாட்டிக்கொள்ளாமல் முன்னேறலாம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.