வைரல்

மொழி தெரியாத கஷ்டமே இனி இல்லை; WFH பணியாளர்களுக்கென வருகிறது புது வசதி : ZOOM செயலியின் அசத்தல் அப்டேட்!

பயனர்களின் வசதிக்காக ஜூம் செயலி கொண்டுவர இருக்கும் புதிய அப்டேட்!

மொழி தெரியாத கஷ்டமே இனி இல்லை; WFH பணியாளர்களுக்கென வருகிறது புது வசதி : ZOOM செயலியின் அசத்தல் அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அலுவலக பணியாளர்கள் அனைவரும் Work From Home என்ற நடைமுறையில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள்.

இதானல் அலுவலக பணியாளர்கள் கலந்து பேசுவதற்கான செயலிகளின் ஆதிக்கமும் அதிகமாகிவிட்டது. Zoom, Google Meet, வாட்ஸ் அப் போன்ற செயலிகளில்தான் அன்றாடம் அலுவலக கலந்துரையாடல்கள் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த செயலிகளைதான் பள்ளி மாணவர்களும் தங்களின் படிப்பிற்கு பயன்படுத்துகின்றனர்.

கோவிட் காரணமாக இந்த செயலிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து, பயனர்களின் வசதிக்கு ஏற்ப செயலிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருப்பதால் ஒரு அலுவலக உறையாடலில் குறிப்பிட்ட மொழியை மட்டும் பேசும் நபர்கள் இருப்பது சாத்தியமில்லை. இந்த மொழி புரியாத பிரச்சனை காரணமாக பயனர்கள் சங்கடமாக கருதாமல் இருக்க ஜூம் செயலி புதிய மாற்றம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

மொழி தெரியாத கஷ்டமே இனி இல்லை; WFH பணியாளர்களுக்கென வருகிறது புது வசதி : ZOOM செயலியின் அசத்தல் அப்டேட்!

அதன்படி வீடியோ காலில் பேசும் போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பேசுபவரின் உரையை மொழிப்பெயர்த்து SubTitle ஆக திரையில் காண்பிக்கும். இது போன்ற Live Translation மற்றும் Transcription கொடுப்பதன் மூலம் பங்கேற்பாளர்களிடையே இருக்கும் மொழித் தடைகள் நீங்கும் என கூறப்படுகிறது.

முதல் கட்டமாக 12 மொழிகளில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஜூம் நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள் இது நடைமுறைக்கு வரும் என கூறியுள்ளது. ஆரம்பத்தில் 12 மொழிகளில் அறிமுகமாகவிருக்கும் இந்த புதிய டெக்னாலஜி குறுகிய காலத்திலேயே 30 மொழிகளாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

அண்மையில் கைட்ஸ் என்ற டிரான்ஸ்லேஷன் நிறுவனத்தை வாங்கிய ஜூம் நிறுவனம், 2 மாதங்களுப் பிறகு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வைட்போர்டு, ஹாட் டெஸ்கிங், ஸ்மார்ட் கேலரியுடன் ஜூம் ரூம்கள், ஜூம் வைட்ஜெட், ஜூம் போன் மற்றும் ஜூம் சாட்ஸின் ஹடில் வியூ உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களும் ஜூம் செயலியில் விரைவில் அறிமுகமாக உள்ளன.

ஜூமின் இந்த அப்டேட்கள் இடம்பெறும் பட்சத்தில் வாடிக்கையாளர்களிடையே ஏகோபித்த வரவேற்புடன் தவிர்க்க முடியாத செயலியாக வளரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூம்-ன் போட்டி நிறுவனமான கூகுள் மீட்டும் அதன் அப்டேட்களுக்கு இணையான அப்டேட்களை கொடுக்க முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக டெக் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories