தெலங்கான மாநிலத்தை 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் கடந்த சில நாட்களாக மாநிலத்தையே உலுக்கி வந்துள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெலங்கான போலிஸார் அறிவித்திருந்த நிலையில் குற்றவாளி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிவந்துள்ளது.
ஹைதரபாத்தில் உள்ள சைதாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி சிங்கிரேனி காலனி. இந்த காலனியில் வசித்து வந்த 6 வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ராஜு என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மகளை காணவில்லை என்று பதற்றமான சிறுமியின் பெற்றோர் சைதாபாத் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாரனையை முடுக்கிவிட்ட காவல்துறையினருக்கு சிறுமி கடைசியாக ராஜு வீட்டிற்கு சென்றது உறுதியானது.
இதனை தொடர்ந்து ராஜுவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிறுமியின் உடல் அங்கிருந்த படுக்கையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால். குற்றவாளியான ராஜு அந்த இடத்தில் இல்லாததால் தேடுதலை தீவிரப்படுத்திய காவல்துறை ராஜு மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து கிட்டத்தட்ட 3000 ஆயிரம் போலீஸார் தீவிரமாக தேடினர்.
அதே வேலையில் இந்த ராஜுவின் புகைப்படத்தை வெளியிட்டு இவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஹைதராபாத் காவல் துறை ஆணையர் அஞ்சனிகுமார் அறிவித்திருந்தார்.
நேற்று இது குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்று அவரின் உடல் கானப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரயில் தண்டவாளத்தில் காண்டெடுக்கப்பட்டுள்ளது.
தன் குற்றங்களுக்கும் அதற்கு கிடைக்கப்போகும் தண்டனைகளுக்கும் பயந்து இவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இறந்த நிலையில் இருக்கும் இவரின் உடலை தெலங்கான போலிஸார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.