மார்வெல் படங்களில் அதிகப்படியான ரசிகர்களை ஈர்த்த படம் அயர்ன் மேன். மார்வெலின் நிறைய புதுவிதமான தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்த அயர்ன் மேன் படத்தில் தான்.
இதில் அயர்ன் மேன் கேரக்டரில் வரும் டோனி ஸ்டார்க்கின் அதிநவீன கண்டுப்பிடிப்புகளில் ஒன்று ‘EDITH’ கிளாஸ். அவரின் அனைத்து படைப்புகளையும் கட்டுப்படுத்தும் திறனும் அவர் குறித்த அனைத்து தரவுகளையும் சேகரித்து வைத்திருக்கும் இந்த EDITH க்ளாஸை போலவே நிஜத்திலும் ஒரு அதி நவீன கண்ணாடியை உருவாக்கியுள்ளது சியோமி நிறுவனம். இந்த புதிய படைப்பிற்கு இவர்கள் “சியோமி ஸ்மார்ட் கிளாஸ்” என பெயரிட்டுள்ளனர்.
அண்மையில் ஃபேஸ்புக் நிறுவனம் ரே-பானுடன் இணைந்து நவீன ஸ்மார்ட் கிளாஸ் ஒன்றை வெளியிட்டது. அதை தொடர்ந்து தற்போது சியோமியும் ஸ்மார்ட் கிளாஸ் சந்தையில் நுழைந்துள்ளது. சியோமி ஸ்மார்ட் கிளாசஸ் மற்ற சாதாரண கண்ணாடிகளைப் போலவே தோற்றமளித்தாலும், இதில் மைக்ரோ எல்.இ.டி ஆப்டிகல் ரே வழிகாட்டி டெக்னாலஜி உள்ளது.
இது தற்போது மிக சிறந்த LED கிளாஸாக கருதப்படும் OLED-ஐ விடவும் அதிக பிரகாசம் மற்றும் நீண்ட ஆயுளைக் தருகிறது. இந்த சியோமி ஸ்மார்ட் கிளாஸ் உபயோகப்படுத்துவோருக்கு அவரின் மொபைலில் வரும் செய்திகள் மற்றும் அறிவுப்புகளை கண்ணாடியின் வழியே காட்டும் வசதியுடையது
மேலும் தொலைப்பேசி அழைப்பு, புகைப்படங்கள் எடுத்தல் போன்ற செயல்களுக்கும் பயன்படும் படியாக வடிவைக்கப்பட்டுள்ளது. இதில் இடதுபுற ஃப்ரேமில் அமைந்துள்ள 5 மெகா பிக்சல் கேரமாவின் உதவியோடு எதையும் பதிவு செய்துக் கொள்ள முடியும். அதே வேலையில் கண்முன்னே தோன்றும் உரையை எளிதில் மொழிப்பெயர்ப்பு செய்யவும் முடியும். சமீபத்தில், ரேபானுடன் இணைந்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட் கிளாஸும் இதே போன்ற அம்சங்களுடன் வந்துள்ளது. இருப்பினும், அந்த கிளாஸின் பிரைவசி கன்சர்ன் அம்சங்கள் குறித்து பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
இதன் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, கடினமான நேரங்களில் இடையூறுகளைக் குறைக்கவும், முக்கியமான தகவல்களை குறித்த நேரத்தில் காண்பிக்கவும் முக்கிய இன்டெராக்ஷன் லாக் இதில் பொருத்தப்பட்டுள்ளது. சியோமி ஸ்மார்ட் கிளாஸ்கள் 2.4 மிமீ x 2.02 மிமீ அளவு கொண்ட டிஸ்ப்ளே சிப்பை கொண்டுள்ளது.
ஆனால் இதுவரை இந்த ஸ்மார்ட் கிளாசஸ் தொடர்பான விலை, அவை எப்போது சந்தையில் என்ற விவரங்கள் மற்றும் இதில் உள்ள பிரைவசி கான்சர்ன் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடவில்லை.