வைரல்

"உபயோகிக்கப்படாமல் இருக்கும் கணக்குகள் நீக்கப்படும்” - பயனாளர்களுக்கு ஷாக் கொடுத்த ட்விட்டர்!

பலகாலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த ட்விட்டர் கணக்குகளை நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

"உபயோகிக்கப்படாமல் இருக்கும் கணக்குகள் நீக்கப்படும்” - பயனாளர்களுக்கு ஷாக் கொடுத்த ட்விட்டர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெகு நாட்களாக உபயோகிக்கப்படாமல் இருக்கும் ஜிமெயில், யாஹூ கணக்குகளை அந்நிறுவனங்களே நீக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்த வழக்கத்தை தற்போது ட்விட்டரும் கையில் எடுத்துள்ளது.

அதாவது, 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகள் டிசம்பர் 11ம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்படாவிட்டால் அவற்றை நீக்கப்போவதாக அறிவித்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.

கணக்குகள் நீக்கப்படுவதன் அறிவிப்புகள் முறையாக பயனாளர்களின் ஜிமெயிலுக்கு தகவல் அனுப்பப்படும் என்றும், அதற்குப் பின்னரே ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்களுக்கு கூடுதள் வசதிகளை ஏற்படுத்துவதற்காகவே பயன்படுத்தாமல் உள்ள கணக்குகளை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், இதற்காக புதிய கொள்கை வரைவுகளையும் ட்விட்டர் தயாரித்துள்ளது என்றும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories