வைரல்

தொழிலாளியின் கழுத்தில் சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு...நெஞ்சைப் பதற வைக்கும் திக் திக் நிமிடங்கள்..!(VIDEO)

நெய்யாறு பகுதியில் புவனசந்திரன் என்ற தொழிலாளியின் கழுத்தில் மலைப்பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டதால் பரபரப்பு.

தொழிலாளியின் கழுத்தில் சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு...நெஞ்சைப் பதற வைக்கும் திக் திக் நிமிடங்கள்..!(VIDEO)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழக கேரள எல்லையான நெய்யாறு பகுதியில் உள்ள கிக்மா என்ற பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அணை அருகே நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் புதர் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கள்ளிகாடு பகுதியை சேர்ந்த புவனசந்திரன் என்பவர் மீது திடீரென புதருக்குள் இருந்த மலைப்பாம்பு ஒன்று உடலோடு உடலாக சுற்றியது. இதனால் அவர் அலறித் துடித்தபடி அங்குமிங்கும் ஓடினார்.

இதைப் பார்த்த உடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள். பாம்பின் வாலையும் தலையையும் பிடித்து இழுத்து அவரது கழுத்துப் பகுதியில் சுற்றியிருந்த பாம்பை மீட்டு அவரை விடுவித்தனர். இதனால் அவர் உயிர் தப்பினார்.

இதைத் தொடர்ந்து அந்த மலைப்பாம்பை வனத்துறையினரிடம் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories