காலநிலை மாற்றம் உலகெங்கிலும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் உயிரினங்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கின்றன.
தென் ஆப்பிரிக்காவில அமைந்திருக்கும் போ விஸ்டா எனும் தீவின் கடற்கரையில் கிட்டத்தட்ட 200 டால்பின்கள் இறந்து கரையொதுங்கின. இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டால்பின்கள் எப்படி இருந்தது என்பதற்கான காரணம் அறியப்படவில்லை. உயிரிழந்த 50 டால்பின்களில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. 4 டால்பின்கள் உச்சபட்ச உறைநிலையில் பதப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், உயிரிழந்த 136 டால்பின்கள், புல்டோசர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு புதைக்கப்பட்டன. ஸ்பெயின் நாட்டின், லாஸ் பாமாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து நிபுணர்கள் வந்தபிறகு, சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகளுக்குப் பின்னரே டால்பின்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது. கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணிகளால், கடல்வாழ் உயிரிகள் உயிரிழந்து வருவதாக, சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.