நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ‘எட்டி’ எனப்படும் பனிமனிதனின் கால் தடத்தைக் கண்டதாக இராணுவ வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பனி மனிதனின் கால்தடம் மனிதர்களை விட மிகப்பெரியதாக இருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
மாகலு - பருண் எல்லைப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது இந்தக் காலடித் தடங்களைக் கண்டுள்ளனர். இதற்கு முன்பும் நேபாள எல்லையில் இவற்றைப் பார்த்திருக்கின்றனராம்.
பனி மனிதனின் கால் தடத்தை இராணுவ வீரர்கள் பார்த்ததை இந்திய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே வெளியிட்டுள்ளனர்.
சராசரி மனிதர்களை விட அதிக உயரம் கொண்ட பனி மனிதன் இமயமலை போன்ற பிரதேசங்களில் வாழ்வதாகக் கூறப்படுகிறது. நேபாள மக்களிடம் பனி மனிதன் குறித்த பேச்சுகள் பலநூறு ஆண்டுகளாகவே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.