தமிழ்நாடு

”அதானி நிறுவனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை” : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.

”அதானி நிறுவனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை” :  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அதானி நிறுவனத்திற்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "அதானி குழுமத்துடன் தமிழ்தாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வணிக ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை.

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டிற்கான மின்தேவையை கருத்தில் கொண்டு ஒன்றிய மின்சாரத்துறையுடன் 1500 மொகா வாட் மின்சாரம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

எனவே அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சாரத் துறை எந்த விதத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. சமூக ஊடகங்களில் முற்றிலும் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories