இந்தியா

”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!

அதானியை உடனே கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசின் ஆதரவுடன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் புரூக்ளீன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது மற்றொரு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுதான் அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் நடக்கின்றன என அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்கிற ஆய்வு நிறுவனம் வெளிச்சம்போட்டு காட்டியது. இது குறித்து SEBI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால், SEBI தலைவரும் அதானி குழுமத்தில் பங்குதாரர்தான் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. இது வரை இந்த முறைகேடு குறித்து ஒன்றிய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில்தான், இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் சோலார் நிறுவனம் தொடங்க, அதானி குழுமத்தால் பல கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்தாக அதானி நிறுவனத்தின் அமெரிக்காவின் புரூக்ளீன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "அதானி இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்காவிலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால், அவரை கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அதானியை பிரதமர் மோடி காப்பாற்றி வருகிறார். அதானி குழும முறைகேடுகள் குறித்து உடனடி விசாரணை தேவை என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories