தமிழ்நாடு

ஒருதலை காதலால் கொடூரம்... ஆசிரியர் ரமணி படுகொலை விவகாரம் : தஞ்சை விரைகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்!

ஒருதலை காதலால் கொடூரம்... ஆசிரியர் ரமணி படுகொலை விவகாரம் : தஞ்சை விரைகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த இவர், 6 முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த சூழலில் ஆசிரியை ரமணியை, அதே பகுதியை சேர்ந்த மதன் (30) என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை ரமணியிடம் கூறிய நிலையில், அவர் மறுத்துள்ளார். ஆனாலும் காதலை விடாத மதன், அவரது ரமணியின் வீட்டிற்கே சென்று பெண் கேட்டுள்ளார். அப்போதும் ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை. இதனை அவர்களிடம் நேரடியாக கூறிய பிறகும், ரமணியை தொந்தரவு செய்துள்ளார் மதன்.

ஒருதலை காதலால் கொடூரம்... ஆசிரியர் ரமணி படுகொலை விவகாரம் : தஞ்சை விரைகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்!

இந்த நிலையில் இன்று ஆசிரியை ரமணி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ரமணிக்கு முதல் பாடவேளையில் வகுப்பு கிடையாது என்பதால், அவர் ஆசிரியர்களுக்கான ஒய்வு அறையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த மதன், ஓய்வு அறையின் வராண்டா பகுதியில் நின்று ரமணியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கோபப்பட்ட மதன், தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஆசிரியரின் கழுத்து மற்றும் வயிறு பகுதிகளில் குத்தியுள்ளார். இதனை கண்ட சக ஆசிரியர்கள், ஆசிரியை ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி உயிரிழந்தார். இதனிடையே தப்பியோட முயற்சித்த மதனை அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மதனை கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருதலை காதலால் கொடூரம்... ஆசிரியர் ரமணி படுகொலை விவகாரம் : தஞ்சை விரைகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்!

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தனது சமூக வலைதள பக்கத்தில்,

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒருதலை காதலால் கொடூரம்... ஆசிரியர் ரமணி படுகொலை விவகாரம் : தஞ்சை விரைகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்!

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், "தஞ்சாவூர், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி பெண் ஆசிரியர் ரமணி படுகொலை சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இந்த விவகாரத்தை ஆராய உயர்கல்வித்துறை அமைச்சரோடு நானும் நேரில் செல்கிறேன். மாணவர்கள் மன ரீதியாக பாதிப்படையாமல் இருக்க, அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது கொலை செய்த குற்றவாளி மதன் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு இந்த விவகாரத்தில் மதனுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories