தமிழ்நாடு

”100 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட மாடலுக்குப் பாதை அமைத்தது நீதிக்கட்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

நீதிக்கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம்! வென்றிடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”100 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட மாடலுக்குப் பாதை அமைத்தது நீதிக்கட்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலவி வந்த சாதிய ஒடுக்குமுறைகளை ஒரு நூற்றாண்டு காலத்தில் புரட்டிப் போட்டு, சமூக நீதியை நிலைநாட்டிய திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் இன்று.

இடஒதுக்கீடு, அதன் வாயிலாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிமை, ஒடுக்கப்பட்ட-தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் காக்கும் உயர்வான சட்டங்கள், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவக் கல்வி பயில சமஸ்கிருதம் கட்டாயம் என்ற தடையை அகற்றி எல்லோருக்கும் டாக்டர் ஆவதற்கான வாய்ப்பளிப்பு என அனைத்தையும் சமூக நீதிக் கண்ணோட்டத்தில் செயல்படுத்தியது நீதிக்கட்சி அரசு.

ஆங்கிலேயர் ஆட்சியில் மிகக்குறைந்த அதிகாரங்கள் மட்டுமே கொண்ட இரட்டை ஆட்சி முறையில், சமூக சீர்திருத்தத்திற்கான இத்தனை சாதனைகளையும் நிறைவேற்றியது நீதிக்கட்சி எனும் திராவிட அரசியல் இயக்கம். அதன் தொடர்சியாகத்தான் திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களான தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோர் சமூக நீதிக் கொள்கையால் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் நீதிக்கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம்! வென்றிடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கிச் சமூகநீதிப் புரட்சி, இலவசக் கட்டாயக் கல்வி மற்றும் காலை உணவுத் திட்டத்தை முன்னோடியாகத் தொடங்கிக் கல்விப் புரட்சி, இந்து சமய அறநிலையச் சட்டம் மூலம் சமத்துவப் புரட்சி என நூறாண்டுகளுக்கு முன்பே இன்றைய திராவிட மாடலுக்குப் பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று.

உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய்ப் பிறந்த நீதிக்கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம்! வென்றிடுவோம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories