தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை! : அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

வடகிழக்கு பருவமழை! : அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முழுக்க பரவலாக மழைப் பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கான (இன்று முதல் நவம்பர் 26) வானிலை நிலவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது” என்றும், “கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக, “தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (21-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

20-11-2024: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர். நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், மயிலாடுதுரை புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம். தூத்துக்குடி, விருதுநக! மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட விவரம் பின்வருமாறு,

21-11-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22-11-2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23-11-2024 மற்றும் 24-11-2024: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவமழை! : அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் என்ன?

25-11-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கணமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

26-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, திருவாரூர். தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள். காரைக்கால் பகுதிகளில் கள முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி,

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பனி னி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும். இருக்கக்கூடும்.

banner

Related Stories

Related Stories