தமிழ்நாடு

பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் !

பாகிஸ்தான் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 14 இந்திய மீனவர்களை விடுவிக்க தேவையா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற போது 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20-11-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 14 இந்திய மீனவர்கள் (7 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்) குஜராத்தின் போர்பந்தரில் இருந்து IND-GJ-25-MM-3458 மற்றும் IND-GJ-25-MM-1582 என்ற பதிவெண்கள் கொண்ட இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றபோது

03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு ஏறக்குறைய 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தோ எவ்விதத் தகவலும் இல்லை என முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்றும் பொருளீட்டும் மீனவர்கள் இல்லாததால் அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்டகாலமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories