தமிழ்நாடு

வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கும் மேல் ஒதுக்கீடு! : அமைச்சர் சேகர் பாபு தகவல்!

குறைந்தபட்சம் 2025 டிசம்பர் மாதத்திற்குள் திட்டமிடப்பட்ட 200 பணிகளையாவது முடிப்போம் என்ற சூழலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கும் மேல் ஒதுக்கீடு! : அமைச்சர் சேகர் பாபு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு ஆய்வு செய்தார்.

அந்த வகையில் ஜமாலியா மற்றும் ராஜா தோட்டம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் கொளத்தூர் நவீன சந்தை மற்றும் திருவிக நகர் பேருந்து நிலையத்திலும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கும் மேல் ஒதுக்கீடு! : அமைச்சர் சேகர் பாபு தகவல்!

இந்த ஆய்வின் போது வீட்டு வசதி வாரியத்தின் செயலாளர் காக்கர்லா உஷா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு, “ஜமாலியா பகுதியில் கட்டப்பட்ட வரும் குடியிருப்புகள் தை மாதம் குடியிருப்பு தாரர்களுக்கு ஒப்படைக்கும் அளவிற்கு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் நாள்தோறும் பணிகள் மிக வேகமாக நடந்து கொண்டு உள்ளது, துரிதமான பணிகளுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் 2025 டிசம்பர் மாதத்திற்குள் திட்டமிடப்பட்ட 200 பணிகளையாவது முடிப்போம் என்ற சூழலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடசென்னை வளர்ச்சி திட்டம் தொடக்கத்தில் ரூ.4,014 கோடி என்ற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இன்று ரூ.6 ஆயிரம் கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது” என்றார்.

banner

Related Stories

Related Stories