தமிழ்நாடு

சென்னையில் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று : பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்!

FIBA ஆசிய கோப்பைக்கான இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி மற்றும் 25ஆம் நாட்களில் நடைபெறவுள்ளது.

சென்னையில் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று : பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

FIBA ஆசிய கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு (2025) நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடக்கூடிய அணியை தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யும் பணியானது நடைப்பெற்று வரக்கூடிய சூழலில் இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி மற்றும் 25ஆம் நாட்களில் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, இந்த தகுதிச்சுற்று போட்டிகள் தொடர்பாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர் சந்திப்பு மற்றும் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைப்பெற்றது.

சென்னையில் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று : பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்!

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா, “பள்ளி, கல்லூரிகள் உடன் இணைந்து கூடைப்பந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். ஆண், பெண் என இரு அணிகளும் 2026 ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் நன்றாக செயல்படுவதற்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.

திருநங்கைகளையும் விளையாட்டில் ஈடுபடுத்தி அதன்மூலம் அவர்களுக்கும் வாய்ப்பளித்து அரசு மூலம் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவளித்து வருகிறது. கடந்த 8 மாதங்களாக இந்திய வீரர்களுக்கு சென்னையில் பயிற்சியளித்து வருகிறோம்” என்றார்.

banner

Related Stories

Related Stories